1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்- சுகாதாரத்துறை மீண்டும் நடவடிக்கை !!

தமிழகத்தில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்- சுகாதாரத்துறை மீண்டும் நடவடிக்கை !!


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனா குறைந்ததால் தற்போது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ஆம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்- சுகாதாரத்துறை மீண்டும் நடவடிக்கை !!

இந்நிலையில் வரும் 8ஆம் தேதி (நாளை மறுநாள்) தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுவரை 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இந்த முகாமில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like