1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்து சூப்பர் அறிவிப்பு!!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்து சூப்பர் அறிவிப்பு!!


திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள பாலேகுப்பம் கிராமத்தில் ரூ.13.80 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக நீர் வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்து சூப்பர் அறிவிப்பு!!

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி தொகையை வழங்கியது. அதே போல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது என்றார்.

இன்னும் 6 மாதகாலத்தில் மகளிர்களுக்கு ரூ.1000 மாத உதவி தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படும் என்று கூறினார். மேலும் காட்பாடி வள்ளிமலை மக்களின் கோரிக்கையை ஏற்று வள்ளிமலையில் அரசு கல்லூரி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்து சூப்பர் அறிவிப்பு!!

இன்னும் ஒரு மாதகாலத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும் என்றும், தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like