1. Home
  2. தமிழ்நாடு

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!!

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!!


கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12-ந் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13-ம் தேதி 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தொடங்கும். தமிழ்நாட்டில் ஜூன் 2-ம் தேதி முதல் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியாகும். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like