1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வில் திடீர் திருப்பம்.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!

பொதுத்தேர்வில் திடீர் திருப்பம்.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!


தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்றும் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 - 2022-ம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான வினாக்கள் 2021 - 2022-ம் கல்வியாண்டிற்கான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் (priority syllabus – குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும்.

பாடத்திட்ட விவரங்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like