லாக் அப் மரணத்தில் திடீர் திருப்பம்… ஆட்டோ ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!!

லாக் அப் மரணத்தில் திடீர் திருப்பம்… ஆட்டோ ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!!

லாக் அப் மரணத்தில் திடீர் திருப்பம்… ஆட்டோ ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!!
X

கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

chn vignesh

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இறப்பை மறைக்க காவலர்கள் 1 லட்ச ரூபாய் கொடுத்ததாக உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் தெரிவித்த தகவல், காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கெல்லீஸ் கிக்னல் அருகில் சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை காவல்துறையினர் உருட்டுக் கட்டையால் தாக்கியதாக, அவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார்.

police

சுரேஷ் என்பவர் தனது பெயரை ரமேஷ் என்று மாற்றி கூறியதாகவும் ஆனால் அவரின் பெயர் சுரேஷ் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தி, அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it