1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் தீ.. ஐசியுவில் 5 டாக்டர்கள் அனுமதி..!

சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் தீ.. ஐசியுவில் 5 டாக்டர்கள் அனுமதி..!


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 2வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், கல்லீரல் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லீரல் பிரிவில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்தால் அதிக அளவில் புகை எழுந்ததால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதற்கிடையே, மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். திடீர் தீ விபத்தால் அந்த கட்டடம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

இந்த தீ விபத்தின் போது, வார்டில் சிக்கியிருந்த நோயாளிகளை மீட்கச் சென்ற 5 டாக்டர்களுக்கு புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like