1. Home
  2. தமிழ்நாடு

எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் மன உளைச்சல்.. தீயிட்டு கொளுத்திய உரிமையாளர்! !!

எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் மன உளைச்சல்.. தீயிட்டு கொளுத்திய உரிமையாளர்! !!


திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிசியோதெரபி மருத்துவர் பிரித்திவிராஜ். இவர் புதியதாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புரோ s என்கிற மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆன்லைன் மூலம் புக் செய்து வாங்கியுள்ளார்.

ரூபாய் 1.5 லட்சம் பணம் செலுத்தி கடந்த ஜனவரி மாதம் டெலிவரி பெற்ற நிலையில், இதுவரை வாகனம் பதிவு செய்து (ரிஜிஸ்ட்ரேஷன்) தரப்படவில்லை. மேலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் பழுதாகி கம்பெனிக்கு கொண்டுசென்று பழுது நீக்கியுள்ளார். அவசரமாக செல்லும்போது அல்லது முக்கிய இடங்களுக்கு செல்லும்போது வழியில் எலக்ட்ரிக் பைக் பிரச்சனை செய்ததால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

இதனிடையே, தனது வாகனத்தை ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொடுக்குமாறு பிரித்திவிராஜ் வலியுறுத்தி வந்துள்ளார். ஆம்பூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இருந்தும், இங்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியாது. ஆம்பூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடியாத்தம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவந்தால் பதிவு செய்து தருகிறோம், என ஓலா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் மன உளைச்சல்.. தீயிட்டு கொளுத்திய உரிமையாளர்! !!

நேற்றிரவு தனது வாகனத்திற்கு முழு சார்ஜ் போட்டு, வாகனத்தை குடியாத்தம் கொண்டு சென்று திரும்பி ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். உள்ளி என்கிற இடத்தில் வாகனத்தின் பேட்டரி முழுமையாக தீர்ந்துவிட்டது என வாகனத்திலிருந்து சமிக்ஞை வந்த நிலையில், வாகனம் நடுவழியில் நின்று உள்ளது.

செய்வதறியாது தவித்த பிரித்திவிராஜ், ஓலா கஸ்டமர் கேருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். 10:30 மணிக்கு தகவல் தெரிவித்த நிலையில், சுமார் மூன்று மணிநேரம் கஸ்டமர் கேர் தரப்பிலிருந்து உரிய பதிலும் வராததால், ஆத்திரம் அடைந்து தனது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலை ஓரமாக நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்து உள்ளார்.

தீயிட்டு எரித்த காட்சியை முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரித்திவிராஜ், கஸ்டமர் கேருக்கு போன் செய்து வாகனத்தை தீயிட்டு எரித்து விட்டதாகவும், தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. தங்களிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை. வந்து இந்த குப்பையை பொறுக்கிக் கொண்டு போங்கள் என தெரிவித்து அந்த ஆடியோவையும் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளதால் இந்த காட்சிகள் மற்றும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிதாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பொழுது, ஓலா தரப்பிலிருந்து முழுமையாக சார்ஜ் போட்டால் வாகனம் 180 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. 44 கிலோமீட்டர் சென்ற நிலையில், வாகனத்தில் உள்ள பேட்டரியில் சார்ஜ் முழுவதுமாக தீர்ந்து உள்ளது.

newstm.in


Trending News

Latest News

You May Like