தமிழகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் தேர்வு.. ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!

தமிழகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் தேர்வு.. ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!

தமிழகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் தேர்வு.. ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!
X

“ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி நியமனங்களுக்கான தேர்வை தமிழகத்தில் நடத்த வேண்டும்” என, ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

“வரும் மே மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு அலகாபாத், மைசூரூ, சிமோகா, உடுப்பி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஆகவே, தமிழகத்தில் உள்ள நகரங்களிலேயே தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்.

இதற்காக, சென்னை ரயில்வே நியமன வாரியத்துக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

Next Story
Share it