1. Home
  2. தமிழ்நாடு

திடுக்கிடும் தகவல்.. புதிய வைரஸ்.. ஆராய்ச்சியாளர்கள் கவலை..!

திடுக்கிடும் தகவல்.. புதிய வைரஸ்.. ஆராய்ச்சியாளர்கள் கவலை..!


அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57) என்பவர் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டேவிட் பென்னட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்தினார். மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டது.
திடுக்கிடும் தகவல்.. புதிய வைரஸ்.. ஆராய்ச்சியாளர்கள் கவலை..!
இதையடுத்து, பன்றியின் இதயம் பொருத்திய இரண்டு மாதங்களில் டேவிட் பென்னட் காலமானார். அவரது மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்கள் அப்போது தெரிவிக்கவில்லை. அவரது உடல் நிலை மோசம் அடைந்து அவர் இறந்தார் என்பதை மட்டும் தெரிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, டேவிட் பென்னட்டின் இதய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர். இதில், டேவிட் பென்னட்க்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயத்திற்குள் டிஎன்ஏ போர்சின் சைட்டோமெகலோ எனும் வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த திடுக்கிடும் தகவலை அடுத்து, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை பொருத்துவதால் புதிய தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like