1. Home
  2. தமிழ்நாடு

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து..!!

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து..!!

நாமக்கலில் சுமார் 18 அடி உயரம் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியுடனும் இருக்கும் திருக்கோவில் ஆகும். ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு. நாமக்கலில் சுமார் 18 அடி உயரம் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியுடனும் இருக்கும் திருக்கோவில் ஆகும். ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு.

இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செயப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு சற்று முன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் குடமுழுக்கு பணிகள் ரூ.33 லட்சம் செலவில் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வடைமாலை சாத்துவதன் காரணம் : முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறில் இருந்து மனிதர்கள் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

Trending News

Latest News

You May Like