கே.ஜி.எஃப் – 2 படம் ஓடிக் கொண்டிருந்த போது தியேட்டரில் துப்பாக்கிச்சூடு!!

கே.ஜி.எஃப் – 2 படம் ஓடிக் கொண்டிருந்த போது தியேட்டரில் துப்பாக்கிச்சூடு!!

கே.ஜி.எஃப் – 2 படம் ஓடிக் கொண்டிருந்த போது தியேட்டரில் துப்பாக்கிச்சூடு!!
X

கர்நாடகாவில் தியேட்டர் ஒன்றில் கேஜிஎஃப்-2 படத்தின் திரையிடலின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் கேஜிஎஃப்-2 வெளியான 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இதுவரையில் 900 கோடி ரூபாய்க்கு படம் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவின் ஒரு தியேட்டரில் கேஜிஎஃப்-2 படத்தின் திரையிடலின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kgf 1

ஏற்கெனவே படம் முழுவதும் துப்பாக்கிச் சூடும் சண்டை காட்சிகளாகவும் இருக்கும் வேளையில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணெதிரே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிக்காவுன் என்ற பகுதியில் உள்ள திரையரங்கில்தான் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு முகலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான வசந்த்குமார் சிவபூர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேஜிஎஃப்-2 படம் பார்க்க சென்றிருக்கிறார்.

gun

படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தவறுதலாக முன் இருக்கையில் இருந்தவரின் இருக்கை மீதி வசந்தின் கால் பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வசந்த்குமாரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து அந்த நபர் தியேட்டர்குள்ளேயே வைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் வசந்த்குமாரை சுட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பினார்.

இதனையடுத்து உடனடியாக விரைந்த போலீஸார் துப்பாக்கியால் சுடப்பட்ட வசந்த்குமாரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பொது வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it