அதிர்ச்சி.. மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்த கணவன்..!

அதிர்ச்சி.. மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்த கணவன்..!

அதிர்ச்சி.. மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்த கணவன்..!
X

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூரில் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதை கணவரே வீடியோ எடுத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பரத்பூர் காவல்துறையினர் கூறியதாவது; ‘பரத்பூரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

மனைவியின் வீட்டார் இவருக்கு ரூ.1.5 லட்சம் வழங்கவில்லை என்பதால் கணவரும் அவரது உறவினரும் தொடர்ந்து கொடுமை செய்துள்ளனர்.

இதன் உச்சபட்சமாக, கணவர் தனது உறவினர்களை வைத்து மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதை வீடியோ எடுத்துள்ளார்.

இதை இணையதளத்தில் பதிவிட்டு அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வரதட்சணை தொகை பாக்கியை ஈடுகட்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த கொடுமையை தாங்க முடியாத மனைவி, தனது தந்தை வீட்டிற்கு சென்று நடந்ததை விவரித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை இது தொடர்பாக விசாரணை தொடங்கியது.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றதாகவும், ஏற்கனவே வரதட்சணை கொடுமை தாங்காமல் அப்பா வீட்டிற்கு அந்த பெண் வந்த நிலையில்,சமாதானப்படுத்தி கணவர் பெண்ணை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் எனக் கூறினர்.

Next Story
Share it