அதிர்ச்சி! மேற்கூரையை துளைத்து வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு!!

அதிர்ச்சி! மேற்கூரையை துளைத்து வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு!!

அதிர்ச்சி! மேற்கூரையை துளைத்து வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு!!
X

சென்னையை அடுத்த ஆவடி அருகே வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிட்டனமல்லி எம்.சி.ராஜா தெருவை சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ் குமார் வேலை முடித்துவிட்டு இரவு வீட்டில் உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ கண்ணாடி உடைந்து சிமெண்ட் ஓட்டில் துளை ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து வீட்டில் தேடி பார்த்த போது அங்கு துப்பாக்கி குண்டு கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

bullet chn

முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜி, தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் சிஆர்பிஎஃப் பயிற்சி வளாகமும், இந்திய விமானப் படையும் இருக்கிறது.

அதனால் அந்த மையங்களில் பயிற்சி மேற்கொள்ளும்போது ஏதேனும் துப்பாக்கிக் குண்டுகள் வந்து விழுந்திருக்கலாம் எனவும் அல்லது வேறு யாரேனும் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு இங்கு வந்து விழுந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it