அதிர்ச்சி! சாலையில் சண்டை போட்டுக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்!!

அதிர்ச்சி! சாலையில் சண்டை போட்டுக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்!!

அதிர்ச்சி! சாலையில் சண்டை போட்டுக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்!!
X

அரசுப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது உள்ள பள்ளி மாணவர்களிடம் சினிமா, சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது. அதனால் ஒழுக்கம் என்பது பள்ளி மாணவர்களிடம் கேள்விக்குறியாகிவிட்டது. ஆசிரியரை மிரட்டுவது, அடிக்க முயல்வது என்று ரீதியில் இருக்கின்றனர்.

அதே போல் சக மாணவர்களுடன் சாலையில் சண்டை போடுவது, அதை சாதனையாக நினைப்பது என்று எண்ணம் மிக மோசமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

cbe students

அதற்கு உதாரணமாக கோவையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஒதுங்கி நின்றனர். இதனை காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it