அதிர்ச்சி! சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா!!

அதிர்ச்சி! சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா!!

அதிர்ச்சி! சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா!!
X

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது. சென்னை ஐஐடியில் நேற்று வரை 12 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

corona

அதனைத் தொடர்ந்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

666 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் பாதிப்பு 30ஆக அதிகரித்துள்ளது. முதல் நாளில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் 3 நாளில் 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it