அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருமண மண்டபத்தில் வகுப்புகள்!!

அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருமண மண்டபத்தில் வகுப்புகள்!!

அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருமண மண்டபத்தில் வகுப்புகள்!!
X

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே போதிய இடம் இல்லாததால் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசுப்பள்ளியை சேர்ந்த ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

குமரமங்கலம் உயர்நிலைப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை பள்ளி கட்டடம் கட்டப்படாமல் தொடக்கப்பள்ளி கட்டடத்திலேயே இயங்கி வருகிறது.

nmk stud

பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருவதால் இடைவேளையின்போது இயற்கை உபாதையை கழிக்க ஒரேநேரத்தில் பலரும் செல்வதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. போதிய இடம் இல்லாததால் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு நடைபெற்று வருகிறது.

திருமண காலங்களில் வாடகைக்கு திருமண மண்டபம் விடப்படும்போது மண்டபத்தில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் படிக்கும் இடத்திலேயே அமர வைக்கப்படுகின்றனர்.

Students

இதனால் பாடங்களை கவனிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக மாணவ மாணவிகள் கூறுகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர தேவைக்காக இந்தப் பள்ளிக்கூடத்தில் இரண்டு கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரவேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it