விரைவில் ஓடிடியில் வெளியாகிறது சீதா ராமம் ..!! எப்போ தெரியுமா ?

விரைவில் ஓடிடியில் வெளியாகிறது சீதா ராமம் ..!! எப்போ தெரியுமா ?

விரைவில் ஓடிடியில் வெளியாகிறது சீதா ராமம் ..!! எப்போ தெரியுமா ?
X

பிரைம் வீடியோ இன்று மிகப்பெரிய சாதனை புரிந்த சீதா ராமம் தெலுங்குத் திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் வெளியீட்டை அறிவித்தது. வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இணைந்து தயாரித்த, இந்த கவிதைநயம் மிக்க காதல் காவியத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.

மனதை கொள்ளை கொள்ளும் நடிப்பு மற்றும் மயக்கும் இசையால் நிரம்பிய சீதா ராமம், திரைப்படம் சீதாவிடமிருந்து கடிதத்தைப் பெற்ற பிறகு தனது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை சந்தித்த ஒரு அனாதை சிப்பாயான லெப்டினன்ட் ராமின் காதல் கதையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறது. செப்டம்பர் 9, 2022 முதல் இந்தியா மற்றும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலுள்ள பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 9, 2022 முதல் இந்த காதல் காவியத்தை தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யோகமாக கண்டு மகிழலாம்.

1

“சீதா ராமம், இரு தனிப்பட்ட பாத்திரங்களுக்கிடையேயான உணர்ச்சி மிக்க தூய அன்புடன் அரவணைத்துச்செல்லும் காலத்தால் அழியாத மற்றும் இதயத்துக்கு நெருக்கமான இதமான திரைப்படம்,”என்று துல்கர் சல்மான் கூறினார். “எங்கள் படம் பெற்றுள்ள முழுமையான வரவேற்பையும் கண்டு நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனேன்., மேலும் பிரைம் வீடியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையின் இதமான அனுபவத்தை பெறுவார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது உண்மையிலேயே ஒரு சிறப்புமிக்க திரைப்படம் மற்றும் என் இதயத்தில் என்றென்றும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்து நிலைத்திருக்கும்”.

"சீதாவாக நடிப்பது என் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க அனுபவங்களில் ஒன்றாகும்" என்று தனது முதல் தெலுங்கு பட அறிமுகம் குறித்து நடிகை மிருணால் தாக்கூர் கூறினார். “கதையைக் கேட்ட சில நிமிடங்களிலேயே நான் மெய்மறந்து போனேன், இந்த வாய்ப்பை என்னால் தவற விட முடியாது. தென்னகத்தில் இது எனது முதல் அறிமுகத் திரைப்படம் மற்றும் ப்ரைம் வீடியோ பிரீமியர் ஸ்ட்ரீமிங் மூலமாக, படத்தை மிக அதிகளவிலான பார்வையாளர்கள் காண்பதற்கும், அதன் வெளியீட்டைத் தொடர்ந்து நான் உணர்ந்த அதே அன்பு வழங்கப்படுவதையும் காண என்னால் இனியும் காத்திருக்க முடியாது.”

“எங்கள் சீதா ராமம் திரைப்பட உருவாக்கப் பயணம் சுவாரஸ்யமாகவும் அற்புதமானதாகவும் அமைந்தது”என்று ராஷ்மிகா மந்தனா கூறினார். “ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள், குறிப்பாக ஹனு சார் அவர்களுக்கு அஃப்ரீனுக்காக அவருக்கு நன்றி. திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பார்வையாளர்களுக்கு நன்றி. பிரீமியர் ஸ்ட்ரீமிங் மூலம் இது மிகப்பெரிய அளவில் அன்பு மற்றும் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்.”

Tags:
Next Story
Share it