1. Home
  2. தமிழ்நாடு

அக்னிபத் போராட்டம்.. உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு..!

அக்னிபத் போராட்டம்.. உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு..!


நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

பீகார், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. நேற்று தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் திரண்ட 300-க்கும் மேற்பட்டோர் ஒரு பயணிகள் ரயிலுக்கு தீ வைத்தனர்.

அப்போது, கூட்டத்தை கலைக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ராகேஷ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like