1. Home
  2. வர்த்தகம்

#BIG NEWS:- கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்.. ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு..!

#BIG NEWS:- கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்.. ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு..!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, தன் கொள்கையை வகுக்கும். அந்த வகையில், ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ ரேட்’ என்று கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 4-ம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக் குழு, 4 சதவிகிதமாக இருந்த ‘ரெப்போ ரேட்’ விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது.

இதனை தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி மீண்டும் கூடிய இந்தக் குழு, ரெப்போ ரேட் வட்டியை மேலும் 0.50 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதமாக நிலவி வந்தது. இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மேலும் உயர்த்தியுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும் போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும்.

ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like