இந்து அறநிலையத்துறை சார்பில் 500 கோடி மதிப்பீட்டில் 1000 கோவில்களில் திருப்பணி..!!

இந்து அறநிலையத்துறை சார்பில் 500 கோடி மதிப்பீட்டில் 1000 கோவில்களில் திருப்பணி..!!

இந்து அறநிலையத்துறை சார்பில் 500 கோடி மதிப்பீட்டில் 1000 கோவில்களில் திருப்பணி..!!
X

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து துறை சார்ந்த 165 அறிவிப்புகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

  • “திருக்கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60 சதவீதம் பங்குத் தொகையாக வழங்கப்படும்.
  • தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாசார மையங்கள் அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு முழுவதும 1000 திருக்கோவில்களில் ரூ.500 கோடியில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோவில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
  • மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவில்களில் 108 திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படும். இதற்கான செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டும் பக்தர்களிடம் கட்டணமாக பெறப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
Share it