பணத்தை திருப்பி கொடுக்கணும்.. ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு..!

பணத்தை திருப்பி கொடுக்கணும்.. ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு..!

பணத்தை திருப்பி கொடுக்கணும்.. ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு..!
X

ஒப்பந்தத்தின் படி வீட்டை ஒப்படைக்காத நிறுவனம் அதற்காக வாங்கிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என ரியல் எஸ்டேட் ஆணைய ஒரு நபர் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அட்சிக்காடு கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. அதில் வீடு வாங்க, ஜெகநாதன் டெனிஸ் மிஸ்ஸர் என்பவர் ஆறு தவணைகளில் 65.34 லட்சம் ரூபாயை செலுத்தினார்.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அந்நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத நிலையில், பணத்தை திரும்பக் கேட்டு அந்த நிறுவனத்துக்கு ஜெகநாதன் நோட்டீஸ் அனுப்பினார். அத்துடன், ரியல் எஸ்டேட் ஆணையத்திலும் ஜெகநாதன் முறையிட்டார்.

இந்த மனு மீது, சுனில் குமார் தலைமையிலான ஒரு நபர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ‘கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை துவக்கி, முடிக்கவில்லை. இதனால், ஒப்பந்தப்படி மனுதாரருக்கு வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது.

எனவே, மனுதாரர் செலுத்திய, 65.34 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும்’ என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
Share it