1. Home
  2. தமிழ்நாடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு..!


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு பரோல் வழங்கி வருகிறது. ஏற்கனவே பேரறிவாளன், ரவிச்சந்திரன் பரோல் பெற்ற நிலையில், வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்த நளினியும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தார்.

தனது தாயார் பத்மாவதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று நளினி தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து பரோலை நீட்டித்து வருகிறார்.

ஏற்கனவே 3 முறை அவரது பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 4வது முறையாக மேலும் 30 நாள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நளினியின் பரோல் இன்று (27-ம் தேதி) முடிவடைய இருந்த நிலையில், தனது தாயார் பத்மாவதியில் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை என்பதால் தனது பரோலை நீட்டிக்க கோரிக்கை மனு கொடுத்தார்.

அதை பரிசீலித்த தமிழக அரசு, நளினிக்கு 4-வது முறையாக பரோலை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி, 26.5.2022 வரை 30 நாட்கள் நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like