ரயில்வே துறை இழப்பீடு வழங்க வேண்டும்!!

ரயில்வே துறை இழப்பீடு வழங்க வேண்டும்!!

ரயில்வே துறை இழப்பீடு வழங்க வேண்டும்!!
X

கூட்ட நெரிசலான ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு ரயில்வேத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தத பயணி ஒருவர் ரயில்வேத் துறையில் இழப்பீடு கோரிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பிரிவு 124(A) கீழ் வரவில்லை என்றும், மனுதாரர் ஓடும் ரயிலில் ஏற முயன்றதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி, ரயிலிலிருந்து தவறி விழுந்த முதியவருக்கு மேற்கு ரயில்வே ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Mumbai

மேலும், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஏற்கெனவே கூட்ட நெரிசலில் வரும் ரயிலில் அவர்கள் நுழைய் முற்படும்போது மற்றொருவர் உந்தித்தள்ளும்போது பயணிகள் விழுவதற்கு வாய்ப்புண்டு.

இதனை தற்செயல் நிகழ்வாக ரயில்வேத் துறை ஏன் கருதக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். அதிகப்படியான நெரிசலால் தவறி விழுந்து படுகாயமடையும் பயணிகளுக்கு மேற்கு ரயிவேத் துறை ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it