மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு..!

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு..!

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு..!
X

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட 25,500 மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இவ்வழக்குகள் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப் பணியாளர்களின் பணி நியமனம் குறித்த வழக்குகள் 3 முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் சம்பளத்துடன் வேறு பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை, 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலப் பணியாளர்கள் பற்றிய வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு விரைவில் மற்றொரு அமர்வில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Next Story
Share it