பிரபல நடிகர் அளித்த புகாரில் தயாரிப்பாளர் கைது!!

பிரபல நடிகர் அளித்த புகாரில் தயாரிப்பாளர் கைது!!

பிரபல நடிகர் அளித்த புகாரில் தயாரிப்பாளர் கைது!!
X

நடிகர் விமல் கடந்த 2020ஆம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவர் நண்பர்கள் சிலர், என் பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயார் செய்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னர் வகையறா பட விற்பனையில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமல் மீது சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

vimal

அதில், களவாணி, களவாணி-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த விமல் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது தன்னிடம் கடனாக ரூபாய் 5 கோடி வாங்கினார். அந்தப் படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாக என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை என்னிடம் வங்கிய கடன் தொகை ரூபாய் 5 கோடியை நடிகர் விமல் திருப்பித்தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன்பிறகு நடிகர் அளித்த புகாரில் சிங்காரவேலனிடம் இருந்து பணம் பெற்று கோபியிடம் கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அவ்வாறு பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

arrest

இந்தநிலையில், கடந்த ஆண்டு விமல் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்படிருந்த நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it