டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை உயர்வு..!!

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை உயர்வு..!!

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை உயர்வு..!!
X

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பை அத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாசித்தார். ஆதில், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறியதாவது, “கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து திருவள்ளுவர் தினத்தன்று, தமிழக அரசு சார்பில் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைப்பவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த விருதினை வழங்கி வருகிறது.

இந்த விருதுக்கான பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், 2022-ம் ஆண்டு முதல் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it