ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.. தனி விமானத்தில் புறப்பட்டார் !!

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.. தனி விமானத்தில் புறப்பட்டார் !!

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.. தனி விமானத்தில் புறப்பட்டார் !!
X

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, நள்ளிரவு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி இந்த ஆண்டில் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். உக்ரைன் மீதான ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்தியா தெளிவான நிலைப்பாடு இல்லாமல் உள்ளது. வாக்கெடுப்பில் புறக்கணித்தும் ரஷ்யாவுடன் வணிக தொடர்பிலும் உள்ளது இந்தியா.

இந்த நிலையில், பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது, உக்ரைன் போர் விவகாரம் முக்கியமானதாக விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின்போது, 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். 7 நாடுகளை சேர்ந்த 8 உலகத் தலைவர்களை அவர் சந்திப்பதுடன் 50 சர்வதேச தொழிலதிபர்கள் உடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

modi new

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி இந்தியா-ஜெர்மனி இடையேயான இருதரப்பு பேச்சுவரத்தையில் பங்கேற்க உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மனியின் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கலின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ஓலாஃப் ஷால்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டுக்கு மத்தியில் ஓலாஃப் ஷால்ஸை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் ஜெர்மனி நிதியமைச்சராக இருந்தார்.

ஜெர்மனி பயனத்தை முடித்துக் கொண்டு டென்மார்க் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் 2ஆவது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் ஒருபகுதியாக, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார். இறுதியாக, பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.newstm.in

Next Story
Share it