ஆசை வார்த்தையால் கர்ப்பம்.. திருமணமான பெண் இளைஞர் வீட்டு முன்பு தர்ணா..!

ஆசை வார்த்தையால் கர்ப்பம்.. திருமணமான பெண் இளைஞர் வீட்டு முன்பு தர்ணா..!

ஆசை வார்த்தையால் கர்ப்பம்.. திருமணமான பெண் இளைஞர் வீட்டு முன்பு தர்ணா..!
X

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டி (50). இவரது மனைவி மாரியம்மாள் (46). இவர்கள் தங்கள் 2-வது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பூர் வாவிபாளையம் குருவாயூரப்பன் நகரில் வசித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கபாண்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். அப்போது, பனியன் நிறுவன உரிமையாளர் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதை அறிந்த ஐஸ்வர்யாவின் கணவர் தங்கபாண்டி, ஐஸ்வர்யாவிடம் சண்டையிட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், பனியன் நிறுவன உரிமையாளர் மகனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக ஐஸ்வர்யா கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பனியன் நிறுவன உரிமையாளர் மகனை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் சம்மதிக்காததுடன், கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா பனியன் நிறுவன உரிமையாளர் மகன் வீட்டின் முன் அமர்ந்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கர்ப்பிணியாக்கிய அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்குளி போலீசார், சம்பவம் குறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story
Share it