தமிழகத்தில் மின் தடை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழகத்தில் மின் தடை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழகத்தில் மின் தடை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!
X

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய 2 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்சினைக்கு காரணம்.

மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். தற்போது இந்த எண்ணில் வரும் புகார்கள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மின்தடை குறித்து பாஜக மாநிலத் தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரம் தேடி வருகிறார். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது" என்று கூறினார்.

Next Story
Share it