பொன்னியின் செல்வன் சேலைகள் விற்பனைக்கு தடை..!!

பொன்னியின் செல்வன் சேலைகள் விற்பனைக்கு தடை..!!

பொன்னியின் செல்வன் சேலைகள் விற்பனைக்கு தடை..!!
X

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் நிலையில், படத்தின் முதல்பாகம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயராமன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது.

1

இப்படத்தின் பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் நட்சத்திரங்களின் புகைப்படங்களுடன் இருக்கும் புடவைகள் சமீபத்தில் தயாராகி விற்பனைக்கு வந்தது. சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த புடவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெறாமல் புடவைகள் தயாராகியிருப்பதால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆன்லைன் சேலை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், “10 நாட்கள் கடுமையாக உழைத்து இந்த சேலையை தயாரித்து தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கின்றது.

1

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து சிலர் எங்களை தொடர்பு கொண்டனர். அவ்வாறு தொடர்பு கொண்டவர்கள், பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்கள் சேலையில் இடம்பெற்றுள்ளது.

இதனை எங்களிடம் காப்பீடு பெற்று நீங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அறியாமையால் சேலையை இப்படி உருவாக்கி இருக்கிறீர்கள். அதனால் உடனடியாக இந்த சேலை தயாரிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் "இவர்கள் இவ்வாறு கூறியதும் நாங்கள் 5 சேலைகளுடன் அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம்" எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்தோடு மேலும் வாய்ப்பு கிடைத்தால் தற்போது அச்சிடப்பட்டு தயாராக இருக்கும் இந்த 5 சேலைகளையும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய நடிகைகளுக்கு பரிசாக வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மிகவும் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ரத்தக்கரையுடன் இருக்கும் சட்டை பிரபலமாகி விற்பனைக்கு வந்தது. இதனை முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வாங்கி அணிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it