1. Home
  2. வர்த்தகம்

மக்களே..!!தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி குறைவு..

மக்களே..!!தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி குறைவு..

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

Gas

அதன்படி கடந்த மாதம் 6-ம் தேதி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 2,177.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 36.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gas

இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று ரூ.1068.50 விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like