Logo

சென்னை மக்களே, வரும் 20ம் தேதி முதல் மாற்றுப் பாதையில் போங்க..!

 | 

திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே ‘லெவல் கிராசிங் கேட்’ தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ‘பராமரிப்பு பணி காரணமாக சென்னை திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையம் இடையே உள்ள அண்ணாமலை நகர் ரயில்வே 'லெவல் கிராசிங் கேட்' (எண்: 4) வருகிற 20-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று தற்காலிகமாக மூடப்படுகிறது.

எனவே, வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையாக கே.சி.பி. சாலை மற்றும் திருவொற்றியூர் மாட்டு மந்தை ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP