1-9 ஆம் வகுப்புகள் வரை தேர்வு இல்லாமல் தேர்ச்சியா? - பள்ளி கல்வித்துறை விளக்கம் !

1-9 ஆம் வகுப்புகள் வரை தேர்வு இல்லாமல் தேர்ச்சியா? - பள்ளி கல்வித்துறை விளக்கம் !

1-9 ஆம் வகுப்புகள் வரை தேர்வு இல்லாமல் தேர்ச்சியா? - பள்ளி கல்வித்துறை விளக்கம் !
X

1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தேர்வின்றி 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தகவல் பரவியது.

dsf

இதனால் பெற்றோர், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், 9ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பரவும் தகவல் தவறானது என்றும், 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 1 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது.

newstm.in

Next Story
Share it