50 ஆயிரத்தை தாண்டியது.. வெளிநாடுகளில் பிறந்த இந்தியக் குழந்தைகள் !

50 ஆயிரத்தை தாண்டியது.. வெளிநாடுகளில் பிறந்த இந்தியக் குழந்தைகள் !

50 ஆயிரத்தை தாண்டியது.. வெளிநாடுகளில் பிறந்த இந்தியக் குழந்தைகள் !
X

கடந்த 2020-ஆம் ஆண்டில் 51,089 இந்தியக் குழந்தைகள் 170 வெளிநாடுகளில் பிறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பதிவு அமைப்பின் வாயிலான அறிக்கையை இந்தியப் பதிவாளா் இயக்குநரகம் (ஆா்ஜிஐ) வெளியிட்டுள்ளது. நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை, இறந்தோா் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அவை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 51,089 குழந்தைகள் 170 வெளிநாடுகளில் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

baby love

அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 16,469 இந்தியக் குழந்தைகள் பிறந்துள்ளன. சவூதி அரேபியாவில் 6,074 குழந்தைகளும் குவைத்தில் 4,202 குழந்தைகளும் பிறந்துள்ளன. கத்தாா் (3,936), இத்தாலி (2,352), ஆஸ்திரேலியா (2,316), ஓமன் (2,177), பஹ்ரைன் (1,567), ஜொ்மனி (1,400), சிங்கப்பூா் (1,358) ஆகிய நாடுகளிலும் குழந்தைகள் அதிகமாகப் பிறந்துள்ளன.

அதே வேளையில், 2020-ஆம் ஆண்டில் 10,817 இந்தியா்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். அவா்களில் சவூதி அரேபியாவில் 3,754 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,454 பேரும், குவைத்தில் 1,279 பேரும், ஓமனில் 630 பேரும், கத்தாரில் 386 பேரும் இறந்தனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it