தேர் விபத்து காரணங்களை கண்டறிய ஒரு நபர் குழு!!

தேர் விபத்து காரணங்களை கண்டறிய ஒரு நபர் குழு!!

தேர் விபத்து காரணங்களை கண்டறிய ஒரு நபர் குழு!!
X

தஞ்சை களிமேடு தேர் விபத்து தொடர்பாக காரணங்களை கண்டறிய ஒரு நபர் விசாரணை குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், தஞ்சை மாவட்டம் களிமேடு தேர் விபத்து குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது, கிராமத்தில் கடைசிப் பகுதிக்கு தேர் வந்தபோது, தேரின் உச்சிப்பகுதி 33KV உயரழுத்த மின்கம்பி மீது உரசியது.

அப்போது மின் இணைப்பு நின்றது. ஆனால் தேரின் பின்னால் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் தொடர்ந்து இயங்கி, அதிலிருந்து மின்சாரம் இரும்புச் சட்டங்களுக்கும், சீரியல் விளக்குகளுக்கு சென்றதால், தீ விபத்து ஏற்பட்டது.

Car-festvel

தீயை அணைக்க அப்பகுதி மக்கள் தேரின்மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டுள்ளனர். 0.19 வினாடிக்குள் எதிர் பாராமல் நிகழ்ந்துவிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

தேரின் உச்சிப்பகுதி மடக்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த போதிலும், விபத்து நடந்த பகுதிக்கு தேர் பகுதிக்கு வந்தபோது உச்சிப்பகுதியை மடக்கப்படவில்லை. மடக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.

விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it