மாணவர்களுக்கு 100000 ரூபாய்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

மாணவர்களுக்கு 100000 ரூபாய்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

மாணவர்களுக்கு 100000 ரூபாய்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
X

தமிழகத்தில், முழு நேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் உள்ளிட்டவர்களுக்கு வருடத்திற்கு 1,00,000 ரூபாய் வரை வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் பெறுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் இதில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பகுதி நேர முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இது வழங்கப்பட மாட்டாது.

அதுமட்டுமின்றி, முதுகலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த கூடுதல் தகவல்களை https://drive.google.com/file/d/1crrX45s7YQ90xTT6sCuc-MP-ra3P72G6/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Next Story
Share it