சிகரெட் வடிவில் சாக்லெட்… ரெய்டு விட்ட அதிகாரிகள்!!

சிகரெட் வடிவில் சாக்லெட்… ரெய்டு விட்ட அதிகாரிகள்!!

சிகரெட் வடிவில் சாக்லெட்… ரெய்டு விட்ட அதிகாரிகள்!!
X

சிகரெட் வடிவிலும், ஊசி போடும் சிரஞ்ச் வடிவிலும் சாக்லேட் விற்பனை செய்த இரண்டு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி குழந்தைகளுக்கு சிகரெட் வடிவிலும், ஊசி போடும் சிரஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பனை செய்வதாக உணவுப்பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸாருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து ஜெய்ஹிந்துபுரத்தில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வந்த இரண்டு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

seal

அந்த சோதனையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஊசி போடும் சிரஞ்சி சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள், குழந்தைகளை தவறான பாதைக்கு திசை திருப்பும் வகையிலான இதுபோன்ற சாக்லேட்டுகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிகாரிகள் உணவகங்களில் நடக்கும் மோசடிகளில், தனி கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உணவங்கள், குளிர்பான நிறுவனங்களில் நச்சுப்பொருள் கலந்து உணவு விற்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it