ஓபிஎஸ், இபிஎஸ் தான் அதிமுகவின் தலைமை.. முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

ஓபிஎஸ், இபிஎஸ் தான் அதிமுகவின் தலைமை.. முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

ஓபிஎஸ், இபிஎஸ் தான் அதிமுகவின் தலைமை.. முன்னாள் அமைச்சர் வளர்மதி..!
X

“அதிமுகவின் தலைமை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே. ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது. எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது” என, மதுரையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “11 மாத கால திமுக ஆட்சியில் அம்மாவின் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என மக்கள் குறை கூறுகின்றனர்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்திவிட்டு, அதற்கு வேறு பெயர்களை சூட்டி தங்களது செல்வாக்கை நிரூபித்துக் கொள்கிறார்கள்.

முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததை போல பேசி வருகின்றனர். சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பதற்கு ஒரு திட்டம் கூட இல்லை.

அதிமுகவின் தலைமை யார் என்பது சமீபத்தில் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது. சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்ப்பதற்கான சிந்தனை எந்த ஒரு தொண்டர்களுக்கும் கிடையாது. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்களது முடிவை ஏற்றுக் கொண்டனர்.

அதிமுகவின் தலைமை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே. அவர்கள் சொல்வதற்கு கட்டுப்பட்டு நாங்கள் நடந்து கொள்வோம். ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது. எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது.

அதிமுக கட்சியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். அதில் தகுதியானவர்களை கட்சிதான் தேர்ந்தெடுக்கும்.

மேலும், மதுரை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக வந்து தேர்தல் நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என்று கூறினார்.

Next Story
Share it