1. Home
  2. தமிழ்நாடு

கலை, அறிவியல் மற்றும் வணிகம் படித்தால் வேலை கிடையாது..?

கலை, அறிவியல் மற்றும் வணிகம் படித்தால் வேலை கிடையாது..?


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு தொடங்கியது. ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் வரவேற்றார்.

இதில், ‘வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு’, ‘2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும்’ ஆகிய தலைப்புகளில் இரண்டு நாள் மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் பேசினார்.
கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை'- ஆளுநர் ரவி
அப்போது அவர், “பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் 70 சதவீத மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்வியைப் பெறுகின்றனர்.

30 சதவீத மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெறுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா..? வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.

அவர்கள் ஒரு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் இரண்டு அல்ல அதற்குமேல் பட்டப்படிப்பு டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Trending News

Latest News

You May Like