1. Home
  2. தமிழ்நாடு

5 வயது வரை இனி பேருந்தில் கட்டணம் இல்லை..!!

5 வயது வரை இனி பேருந்தில் கட்டணம் இல்லை..!!


தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயண சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் இணையவழியில் இருவழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், பள்ளி வாகனங்களுக்கு முன்புறம், பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்த பள்ளி வாகன ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like