1. Home
  2. தமிழ்நாடு

30 வது நாளாக மாற்றமில்லை.. சென்னையில் ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!

30 வது நாளாக மாற்றமில்லை.. சென்னையில் ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!


சென்னையில் இன்று 30 வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த 29 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து 30-வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இன்றும் தொடர்கிறது.

அதன்படி, டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாய் 41 காசுகளாகவும், கொல்கத்தாவில் 115 ரூபாய் 12 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Trending News

Latest News

You May Like