ஜெயிலர் போஸ்டரால் நெல்சனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் என்ற திரைப்படத்தை எடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
சிவகார்த்திகேயன், அனிருத்துடன் இணைந்து அவர் உருவாக்கி அரபிக் குத்து பாடல் உலக அளவில் ஹிட்டானது. ஆனால், படம் வெளியான பின்னர் விஜய் ரசிகர்களைக் கூட பீஸ்ட் திருப்திபடுத்தவில்லை. இந்நிலையில் நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Google la Belgium Steel mill Pic eduthu , oru kaththi soruvi Title vittu irukkaan 🤣🤣🤣 #Jailer #Rajini pic.twitter.com/yb7azMwQhi
— TʜʀɪʟʟᴇR ツ (@Itz_Thriller) June 17, 2022
ஜெயிலர் போஸ்டரில் கத்தி ஒன்று தொங்க விடப்பட்டு அதில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும். அதன் பின்னால் உள்ள கட்டித்தை பார்த்தால் ஜெயிலைப் போன்ற தோற்றம் உடையதாக முதலில் தோன்றும். ஆனால் இந்த படத்தை belgium steel mill என்று கூகுளில் டைப் செய்தாலே பார்க்கலாம்.
எனவே விஜய் ரசிகர்கள் அந்த ஃபோட்டோவையும், பர்ஸ் லுக் போஸ்டரையும் அருகருகே வைத்து நெல்சனை கலாய்த்து வருகின்றனர்.
newstm.in