இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால், அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர்.

தற்போது, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு இடங்களில் தமிழக அரசும், தனியார் அமைப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தேனியில் நாளை (6-ம் தேதி) தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (6-ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டப்படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

Next Story
Share it