மதுரை மேம்பால கட்டுமானப்பணி விபத்து.. ரூ.3 கோடி அபராதம்..!

மதுரை மேம்பால கட்டுமானப்பணி விபத்து.. ரூ.3 கோடி அபராதம்..!

மதுரை மேம்பால கட்டுமானப்பணி விபத்து.. ரூ.3 கோடி அபராதம்..!
X

மதுரை புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த பணிகளை, மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜேஎம்சி புராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

2022 ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் அருகில் உள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2021 ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக, மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் ஜேஎம்சி புராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்யேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மிஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்டுமான பணியின்போது மேம்பாலம் இடிந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனமான ஜேஎம்சி புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதமும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it