2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவுக்கு அனுமதி !!

2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவுக்கு அனுமதி !!

2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவுக்கு அனுமதி !!
X

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்றது. இதனால் பக்தர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து வந்தனர். இதனால் பெரியளவில் விழாக்கோலம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா குறைந்து வருவதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

mdu meenakshi

மதுரை சித்திரை திருவிழா 2022 எப்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் உள்ளிட்ட திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எப்போது தேதி என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்

ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (Meenakshi Sundareshwarar Thirukalyanam 2022) யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
mdu meenakshi
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.

ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்..

Tags:
Next Story
Share it