1. Home
  2. விளையாட்டு

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த லிந்தோய் சனம்பம்!!

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த லிந்தோய் சனம்பம்!!

சரஜீவோவில் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அரீனா ஹோட்டல் ஹில்ஸில் நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ எடைப் போட்டியில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி லிந்தோய் சனம்பம் பிரேசிலின் பியான்கா ரெய்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் ஜூடோ விளையாட்டில் இந்தியாவின் முதல் யு18 உலக சாம்பியனானார்.

LinthoiChanambam

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த ஜூடோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் லிந்தோய் சனம்பம். கடந்த 2017 இல் சப்-ஜூனியர் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தார், அதன் பின்னர் அவர் JSW-ன் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் ஜூடோ திட்டத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

இதுகுறித்து லிந்தோய் சனம்பம் கூறுகையில், “நான் எப்படி உணர்கிறேன் என்பதை இப்போது என்னால் விளக்க முடியாது, ஆனால் இந்த வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

முன்னதாக 2021-ல் தேசிய கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து லெபனானின் பெய்ரூட்டில் நடந்த ஆசியா - ஓசியானியா கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார்.


Trending News

Latest News

You May Like