மின்வெட்டு… மெழுகுவர்த்தி ஏற்றி தேர்வுக்கு தயாரான மாணவர்கள்!!

மின்வெட்டு… மெழுகுவர்த்தி ஏற்றி தேர்வுக்கு தயாரான மாணவர்கள்!!

மின்வெட்டு… மெழுகுவர்த்தி ஏற்றி தேர்வுக்கு தயாரான மாணவர்கள்!!
X

திருத்தணியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இதனால், மாணவர்கள், மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில், மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

power 1

தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை பொதுத் தேர்வு துவங்கியுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாலை, 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவள்ளூர் மாவட்டம் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இதனால் கிராமப்புறத்தில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி படித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

power 1

அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி, கற்றல் திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தடையின்றி மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Next Story
Share it