எம்ஆர்பி-யை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் உரிமம் ரத்து.. அரசு எச்சரிக்கை

எம்ஆர்பி-யை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் உரிமம் ரத்து.. அரசு எச்சரிக்கை

எம்ஆர்பி-யை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் உரிமம் ரத்து.. அரசு எச்சரிக்கை
X

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தைவிட புதுச்சேரி சரக்கு என்றால் எப்போதும் குடிகாரர்கள் மத்தியில் ஒரு உற்சாகம் உண்டு. ஏனெனில் புதிய வகை மதுபானங்கள் மற்றும் விலையும் என்பதே அதற்கு காரணம். ஆனால், அங்கும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

wine

இந்த நிலையில், புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் கலால்துறை தாசில்தார்களுக்கு (சோதனை) பிறப்பித்துள்ள உத்தரவில், மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு பீர், மதுபானங்கள் விற்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக அதிகப்பட்ச சில்லரை விற்பனை விலையான எம்ஆர்பியை விட கூடுதலாக விற்கக்கூடாது.

wine

இது கலால் விதியை மீறும் செயல். கூடுதல் விலைக்கு கடையிலுள்ள ஊழியர் ஈடுபட்டாலும் கடை உரிமதாரருக்கே இதில் முழு பொறுப்பு உண்டு. அதனால் எம்ஆர்பி-யை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என்று ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீறி கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் இடைநீக்கமோ, ரத்தோ செய்யப்படும். இதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கலால்துறை கருதி நடவடிக்கை எடுக்கும், என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it