1. Home
  2. தமிழ்நாடு

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்..!!

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்..!!


சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். பூஸ்டர் டோஸ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசு விரைவில் பதிலளிக்கும் என நம்புகிறோம். அது வரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அத்திட்டத்தை தொடங்கி வைப்பேன்.

6 முதல் 12 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு கூறினாலும் அதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்த உடனேயே தடுப்பூசி செலுத்த தமிழகம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like