கருணாநிதி நினைவிடத்தில் கோவில்.. திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

கருணாநிதி நினைவிடத்தில் கோவில்.. திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

கருணாநிதி நினைவிடத்தில் கோவில்.. திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!
X

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர வடிவில் அலங்காரம் செய்யப்பட்டிருப்பது, திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழக சட்டசபையில் 2022 - 2023-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. அந்த வகையில் இன்று (4-ம் தேதி) இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் திடீர் ”கோவில்” ஒரு நிமிடம் திடுக்கிட்ட  உடன்பிறப்புகள்.. ஆனால் மேட்டரே வேற! | A temple tower like decoration has  been erected at the memorial of ...
அத்துடன், கோவில் கோபுரம் போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு, அதன் கீழே வெள்ளை நிறத்தில் இந்து சமய அறநிலையத்துறை என எழுதப்பட்டுள்ளது.

கடவுள் மறுப்பு கொள்கையுடன் இருந்த கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டது திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அத்துடன் இது, இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Next Story
Share it